உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாவல் பழம் சீசன் துவக்கம் கிலோ ரூ.100க்கு விற்பனை

நாவல் பழம் சீசன் துவக்கம் கிலோ ரூ.100க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம், வளையகாரன்புதுார், லாலாப்பேட்டை, திருக்காம்புலியூர், மாயனுார், கட்டளை ஆகிய ஊர்களில் உள்ள, காவிரி படுகை இடங்களில் நாவல் மரங்கள் உள்ளன. தற்போது சீசன் துவங்கிய நிலையில், பலத்த காற்றின் காரணமாக பழுத்த நாவல் பழங்கள் மரத்தில் இருந்து கீழே விழுகின்றன. பழங்களுக்கு சேதாரம் ஏற்படாமல் இருக்க, வியாபாரிகள் மரத்தின் கீழ் பகுதியில் பழங்களை சேகரிக்கும் வகையில் வலைகளை கட்டியுள்ளனர். இந்த வலைகளில் விழும் பழங்களை சுத்தம் செய்து, பின்னர் கடைவீதிகளில் விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு நாவல்பழம் கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாவல்பழம் மருத்துவம் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்களாக இருப்பதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை