மேலும் செய்திகள்
செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
23-Dec-2025
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், செவிலியர்கள் நேற்று ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி, 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த, 18 முதல் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக, கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சங்க உறுப்பினர் விஜயலட்சுமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.
23-Dec-2025