உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செவிலியர் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்

செவிலியர் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்:தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தொகுப்பூதிய பணி நியமனங்களை கைவிட வேண்டும்; அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களை, புதிய பணியிடங்களை ஏற்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !