உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் இடங்களில் கருவேல மரங்கள்; அகற்றுவதில் மெத்தனம்

தனியார் இடங்களில் கருவேல மரங்கள்; அகற்றுவதில் மெத்தனம்

கரூர்: தனியார் இடங்களில், கருவேல மரங்கள் அகற்றும் பணியில் மாந-கராட்சி மெத்தனம் காட்டி வருகிறது.சீமை கருவேல மரங்கள் பருவமழை பெய்ய விடாமல் தடுப்ப-துடன், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி, பூமிக்கடியில் உள்ள நீரின் அளவை குறைக்கிறது. அத்துடன், நிலத்தில் இருக்கும் நல்ல நீரை உப்புத்தண்ணீராக மாற்றி விடுகிறது.இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தனியார் இடங்களில் அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 2 லட்சம் சதுர மீட்டர் அளவிலும், 933 தனியார் பிளாட்டுகளில் கருவேல மரங்கள் இருப்பதாகவும் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. 2017ல், நீதிமன்றம் உத்தரபடி படி, மாநகராட்சி, பொதுப்பணி, நெடுஞ்-சாலை உட்பட்ட சம்பந்தப்பட்ட துறைகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், காலப்போக்கில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டது.வெங்கமேடு பாலம், ரயில்வே ஸ்டேஷன், ராமனுார், காந்தி-கிராமம், ராமகிருஷ்ணபுரம் உட்பட பல்வேறு இடங்களில் தனியார் மற்றும் அரசு இடங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமின்றி, சமூக விரோதிகளின கூடாரமாக விளங்கி வருகிறது. இங்கு, மது அருந்-துதல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட ஏதுவாக உள்-ளது. எனவே, சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை