உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூதாட்டி சடலமாக மீட்பு

மூதாட்டி சடலமாக மீட்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 45; விவசாய தொழிலாளி. இவரது பாட்டி சின்னம்மாள், 75; கடலை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, திம்மாச்சிபுரம் தனியார் ஓட்டல் எதிரே இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த லாலாப்பேட்டை போலீசார், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, மூதாட்டியின் பேரன் முருகேசன் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை