மேலும் செய்திகள்
பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது
10-Apr-2025
மாமியாருக்கு அடி: மருமகன் கைது
19-Apr-2025
கரூர்க.பரமத்தி அருகே மின்சாரம் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி முன்னுார் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 47; இவர் கடந்த, 28ல் வீட்டில் இரும்பு கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, கட்டிலுக்கு அருகில் மின்சார ஜங்ஷன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த, வாட்டர் ஹீட்டரின் இரும்பு ராடு, இரும்பு கட்டிலில் உரசியது. அதில், கட்டிலில் துாங்கி கொண்டிருந்த பழனிசாமிக்கு, மின்சாரம் தாக்கியதில் மயக்கம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து, பழனிசாமியின் மனைவி வசந்தி, 45, போலீசில் புகார் அளித்தார்.க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Apr-2025
19-Apr-2025