உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாளை இயற்கை வேளாண்மை திருவிழா

கரூரில் நாளை இயற்கை வேளாண்மை திருவிழா

கரூர், கரூரில், நாளை ஒரு நாள் (24ல்) இயற்கை வேளாண்மை திருவிழா நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதுகுறித்து, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் விவசாயிகள் சங்கம், நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், கரூர் ஜே.சி.ஐ., டைமண்ட், யங் இன்டியன்ஸ் சார்பில், கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் நாளை காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, இரண்டாவது இயற்கை வேளாண்மை திருவிழா நடக்கிறது. திருவிழாவை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். திருவிழாவில் கண்காட்சி, விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி பட்டரை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் இடம் பெறுகிறது.விழாவில், பங்கேற்கும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான இயற்கை உணவுகள், இலவசமாக வழங்கப்படும். நுழைவு கட்டணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.இயற்கை வேளாண்மை திருவிழா ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷன், செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி