மேலும் செய்திகள்
மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
16-Jun-2025
கரூர் மாயனுார் கட்டளை சாலையில் உள்ள, மேல்நிலை தொட்டி சேதமாகி உள்ளது.கரூர் மாவட்டம், மாயனுார் அருகில் கட்டளை பகுதியில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக, மாயனுார் கட்டளை சாலையில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம், காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை குடிநீர் தொட்டி தற்போது, சேதமடைந்துள்ளது. குறிப்பாக தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இப்போது தொட்டியை பராமரிக்காமல் விட்டால், மேலும் சேதமாகி இடிந்து விழும் நிலை ஏற்படும். எனவே விரைவில் தொட்டியை, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
16-Jun-2025