கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையோரம் வர்ணம் பூசும் பணி
கரூர், டிச. 21-கரூர் பஸ் ஸ்டாண்ட், மனோகரா ரவுண்டானா அருகில் உள்ள சாலையோரத்தில் வர்ணம் பூசும் பணி நடந்தது.கரூர் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில், மனோகரா ரவுண்டானா, ஜவஹர் பஜார், கோவை செல்லும் சாலை, திருச்சி சாலை ஆகியவை நகரின் பிரதான சாலைகளாகும். சாலையோரம் வாகனங்கள் நிறுத்திக் கொள்ளும் வகையில், கோடு வரையப்படவில்லை. இதனால், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இப்பகுதியில், டூவீலர்களும், பஸ்களும் கூட செல்ல முடியாத அவல நிலை உள்ளன.பஸ் ஸ்டாண்டை சுற்றி வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், வங்கிகள் இருப்பதால், ஆட்டோ, வேன்கள் அதிகளவில் வந்து செல்கிறது. அதன் டிரைவர்கள் சாலை நடுவில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், போக்குவரத்து போலீசார் சார்பில் சாலையோரம் வர்ணம் பூசும் பணி நடந்தது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தி கொள்ளும் வகையில் கோடுகள் வரையப்பட்டு வருகின்றன.