உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழக அணியில் இடம் பிடித்த பள்ளப்பட்டி பள்ளி மாணவர்

தமிழக அணியில் இடம் பிடித்த பள்ளப்பட்டி பள்ளி மாணவர்

அரவக்குறிச்சி, அரக்கோணத்தில் நடந்த வலை பந்தாட்ட போட்டி யில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர் வெற்றி பெற்று, தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய, 14 வயதிற்கு உட்பட்டோருக்கான வலை பந்தாட்ட போட்டி, அரக்கோணம் பனம்பாக்கம் பாரதிதாசனார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.இப்போட்டியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 90 மாணவர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் சார்பாக, பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் கவின் கலந்து கொண்டார். சிறப்பாகவும், தனித்துவமாகவும் இவர் விளையாடியதால், வலை பந்தாட்ட போட்டியில், தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் நடைபெறும், தேசிய அளவிலான வலை பந்தாட்ட போட்டியில், தமிழ்நாடு அணிக்காகவும் இவர் விளையாட உள்ளார். வெற்றி பெற்ற மாணவர் கவினை, பள்ளி தாளாளர் மற்றும் எஜுகேஷன் சொசைட்டி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை