உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பன்னீர் செல்வம் அணி நிர்வாகி அ.தி.மு.க.,வுக்கு தாவினார்

பன்னீர் செல்வம் அணி நிர்வாகி அ.தி.மு.க.,வுக்கு தாவினார்

கரூர், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, கரூர் மாவட்ட துணை செயலர் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.அந்த அமைப்பின், கரூர் மாவட்ட துணை செயலராக இருந்தவர் ஐயப்பன், 48. இவர், நேற்று அந்த அமைப்பில் இருந்து விலகி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.அப்போது, கரூர் மத்திய தெற்கு பகுதி செயலர் சேரன் பழனிசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலர் ரங்கராஜ், பேரவை இணை செயலர் வெங்கட்ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை