உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் கழிப்பிடம் திறக்ககோரி பயணிகள் ஆர்வம்

மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் கழிப்பிடம் திறக்ககோரி பயணிகள் ஆர்வம்

கரூர்: மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பிடங்களை, உடனடியாக திறக்க வேண்டும் என, பய-ணிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், மாயனுார் வழியாக நாள்தோறும், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேலும், மாயனுாரில் இருந்து நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள்தோறும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் செல்கின்றனர். இந்நி-லையில், மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் உள்ள, கழிப்பிடங்கள் பெரும்பாலும் பூட்டப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கழிப்பிடம் கட்ட வேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிதாக, நவீன வசதி-களுடன் சில மாதங்களுக்கு முன்பு, கழிப்பிடம் கட்டும் பணி துவங்கி, பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால், புதிய கழிப்பிடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு, திறந்து விடாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இதனால், மாயனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள், தொடர்ந்து திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வரு-கின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, கழிப்பிடங்-களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.]


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை