உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிழற்கூடத்தில் சேதமடைந்த விளக்கு புதிதாக மாற்ற பயணிகள் கோரிக்கை

நிழற்கூடத்தில் சேதமடைந்த விளக்கு புதிதாக மாற்ற பயணிகள் கோரிக்கை

நிழற்கூடத்தில் சேதமடைந்த விளக்குபுதிதாக மாற்ற பயணிகள் கோரிக்கைகரூர், அக். 18-நிழற்கூடத்தில் சேதமடைந்த விளக்குகளை மாற்ற வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சியில் உள்ள பஸ் ஸ்டாப் பகுதிகளில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்க முடியாத நிலை ஏற்படுகிறது.கரூர், கோவை சாலையில் வையாபுரி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தினமும் ஏராளமான பயணிகள் காத்திருந்து, பஸ்களில் ஏறி செல்கின்றனர். அதில், அமைக்கப்பட்டுள்ள டியூப் லைட்டுகள் சேதமடைந்துள்ளது. அவைகள் கழன்று தொங்குவதால் பயணிகள் நிற்க அச்சப்படுகின்றனர். அந்த விளக்குகள் தலையில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் நிற்கின்றனர். எனவே சேதமடைந்த விளக்குகளை அகற்றி, புதிதாக பொருத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை