உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகளால் பயணியர் அவதி

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகளால் பயணியர் அவதி

கரூர்: திருச்சி, சேலம், ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், சேலம் மார்க்கமாக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, சேலம், திருச்சி, ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்ப-றைகள் எந்த நேரமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.இதுகுறித்து, ரயில்வே பயணியர் கூறியதாவது: திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மார்க்கத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கழிப்பறைகள் திறக்கப்படுவதில்லை. இதனால், ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு சென்று, சாவியை கேட்டு வாங்கி செல்ல வேண்டும். இதில், பெண்களுக்கு தயக்கம் ஏற்படுகிறது. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகளை திறந்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை