வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஸ்டிரைக் வெறிச்சோடிய அலுவலகத்தால் மக்கள் ஏமாற்றம்
கரூர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்த உரிய அவகாசம், நிதி ஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சீனியாரிட்டி நிர்ணயம் செய்வதில் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம், 48 மணி நேரம் வேலை நிறுத்தத்தை துவங்கினர்.இதனால் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் குறைந்த அலுவலர்களுடன் இயங்கியது. இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டதில் வருவாய்த்துறைக்கு, 250 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். பட்டா மாறுதல், நிலஅளவை, உதவித்தொகை, கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.