ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கிய ஊற்றுநீரால் மக்கள் அவதி
கரூர்: கரூர் அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் ஊற்றுநீர் தேங்-கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் அருகே, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டது. அதை பொதுமக்கள் தற்-போது, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மேலும், ரயில்வே குகை வழிப்பாதை கட்டப்பட்டுள்ள பகுதியில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது.இதனால், ரயில்வே குகை வழிப்பாதையில் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில்வே குகை வழிப்பா-தையில் நடந்து கூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும், குகை வழிப்பாதை வழியாக செல்ல முடியாமல், மாற்று பாதையில் செல்கின்றனர். எனவே, பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பா-தையில், தேங்கியுள்ள ஊற்று நீரை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்-பார்க்கின்றனர்.