சாலை இருபுறமும்வளரும் முட்செடிகள்மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்:சரவணபுரம் பகுதியில் இருந்து, வரகூர் செல்லும் சாலையின் இருபுறமும் முட் செடிகள் வளர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம் பகுதியில் இருந்து, வரகூர் வரை சாலை செல்கிறது. தற்போது சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள், சாலையில் ஒதுங்கும் போது முட்செடிகளால் சிறு காயங்கள் ஏற்படுகிறது. மேலும் மக்கள் சிரமத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. சாலை இருபுறமும் வளர்ந்து வரும் முட்செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.