மேலும் செய்திகள்
நிழற்கூடம் இன்றி மக்கள் அவதி
14-Nov-2026
அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட விஸ்வநாதபுரி அருகே உள்ள தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி, தாராபுரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மேலும் கோவை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால், தினமும் ஏராளமானோர் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, விஸ்வநாதபுரி, குளத்துார்பட்டி, சாலைப்புதுார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. இதனால், வெயில், மழையில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Nov-2026