உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடிகாலில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற மக்கள் வலியுறுத்தல்

வடிகாலில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற மக்கள் வலியுறுத்தல்

குளித்தலை : வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.குளித்தலை நகராட்சி பகுதியில், பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 12 பாசன கண்ணாறு விவசாயிகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. 25 ஆண்டுகளுக்கு மேலாக பாசன கண்ணாறுள் அனைத்தும் கழிவு நீர் வடிகாலாக மாறிவிட்டது. மேலும், கழிவு நீர் வடிகால் தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளால் கழிவுநீர் தேக்கமடைந்து, கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் வடிகாலில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை