உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவடியான் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் எதிர்ப்பு

கரூர் மாவடியான் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் எதிர்ப்பு

கரூர், கரூர் மாநகராட்சியில் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, ஜவகர் பஜார், சர்ச் கார்னர் உள்பட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை அகற்ற வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது. அவ்வப்போது, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், கரூர் மாவடியான் கோவில் தெரு அருகில் உள்ள, சந்து பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று சென்றனர். அங்கு, ஆக்கிரமிப்பு அகற்றக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பாதுகாப்பு பணிக்கு வந்த கரூர் நகர போலீசார், அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும், தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என மக்கள் திரண்டனர். பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத சூழ்நிலையில், மாநகராட்சி பணியாளர்கள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி