உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

கரூர், கரூர்-திருச்சி சாலையில் உழவர் சந்தை, அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில், மருத்துவ மனைகள் உள்ளன. இதன் வழியாக பொதுமக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்நிலையில், உழவர் சந்தை அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, உழவர் சந்தை அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை