உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொது சுகாதார வளாகம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

பொது சுகாதார வளாகம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகளில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 1வது வார்டில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ராஜேந்திரம் பஞ்., கிராமமும் உள்ளது. இந்த பகுதியில், தனி நபர் கழிப்பறை வசதி குறைவு.பொது சுகாதார மையம் இல்லாததால், இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைக்காக சாலையோரம் மற்றும் ரயில் பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் விஷஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதாலும், ரயில் பாதையை கடக்கும் போது சிலர் ரயிலில் அடிபட்டு இறப்பதும் தொடர்கிறது.எனவே, மருதுார் டவுன் பஞ்., 1 வது வார்டு பகுதியில், பொது சுகாதார மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ