உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடவூரில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

கடவூரில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

குளித்தலை :குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு, சிறப்பு அலுவலர் டி.எஸ்.ஓ., சுரேஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் தாசில்தார் சவுந்தரவள்ளி, தனி தாசில்தார் மணிவண்ணன், மண்டல துணை தாசில்தார் உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதல் நாளான, கடவூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட ஆதனுார், செம்பியநத்தம், மாவத்துார், முள்ளிப்பாடி, பாலவிடுதி, இடையபட்டி மேற்கு, இடையபட்டி கிழக்கு ஆகிய 7 பஞ்சாயத்துகளில் இருந்து வந்த மக்கள் பட்டா மாறுதல், சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்று, பொது இடங்கள் மற்றும் கோவில் இடங்களில் ஆக்கிரமிப்புகளை மீட்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இரண்டாம் நாளான கடந்த, 23ல் மைலம்பட்டி குறுவட்டத்திற்கு உட்பட்ட பாப்பயம்பாடி, வடவம்பாடி, பண்ணப்பட்டி, வரவனை, மஞ்சாநாயக்கன்பட்டி, காளையாப்பட்டி, மேலப்பகுதி, தேவர்மலை ஆகிய எட்டு பஞ்.. பகுதிகளில் உள்ள மக்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை