உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், கரூர் அருகே, அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் கடந்த, 30 ஆண்டுகளாக துணை சுகாதார நிலையம் செயல்பட்டது. அதில், நொய்யல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் துணை சுகாதார நிலையத்தின் மேற்கூரை சேதம் அடைந்தது.மழைக்காலங்களில், துணை சுகாதார நிலையத்தில் நீர் கசிந்தது. இதனால், துணை சுகாதார நிலையம் மூடப்பட்டது. இதனால், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சிகிச்சைக்காக வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, நொய்யல் குறுக்கு சாலையில் பழைய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ