கரூர் அருகே மின் கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு
கரூர்:கரூர் அருகே, தனியார் தரப்பில் மின் கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில், சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, வெள்ளியணை துணை மின் நிலையத்துக்கு, மின்சாரம் கொண்டு செல்ல வசதியாக, வெ ள்ளியணை தெற்கு கிராமத்தில், வண்டி பாதை வழியாக மின் கம்பம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.வண்டிபாதை பகுதியில் மின் கம்பம் அமைத்தால், கால்நடை-களை ஓட்டி செல்ல முடியாது. விவசாய விளை பொருட்க-ளையும் எடுத்து செல்ல முடியாது. இதனால், வண்டி பாதையில் மின் கம்பம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.