வெடிகுண்டு மிரட்டலால் கலெக்டர் ஆபீஸில் சோதனைக்கு பின் அனுமதி
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்க சிலர் முயல்வதாகவும், அதுபற்றி தனக்கு தகவல் தெரியும் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்கினால் அதுபற்றி தெரிவிப்பதாக மொட்டை கடிதம் வந்தது.இதை தொடர்ந்து மோப்ப நாய்கள் பவானி, வால்டர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள், கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.இதில் வெடிகுண்டு ஏதுமில்லை என்பதை உறுதி செய்தனர். அன்று முதல், கலெக்டர் அலுவலக நுழைவு பகுதியில் சோதனைக்கு பின்னரே பொதுமக்களை அனுமதித்தனர்.இந்நிலையில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 500க்கும் மேற்பட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முகாமுக்கு வந்த அதிகாரிகள், அவர்களது வாகனங்களை, மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே அனுப்பினர்.சந்தேகத்துக்கு இடமான பொருட்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. தவிர கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் போலீசார் மற்றும் மோப்ப நாய் வால்டர் மூலம் சோதனை நடந்தது.