உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் வட்டாரத்தில் உள்ள பாலவிடுதி பஞ்..சாந்துவார்பட்டி கிராம மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு-மனை பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை மனுக்களை கடவூர் தாசில்தாரிடம் வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: சாந்துவார்பட்டியில், 700 ஆதிதிரா-விடர் குடும்பங்கள் உள்ளன. இங்கு வீடுகள் மற்றும் போதிய இடவசதி இல்லாமல் ஒரே வீட்டில், 2 முதல் 3 குடும்பங்கள் இணைந்து வசிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே, இலவச வீட்டுமனை பட்டா வழங்க, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உள்பட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்-பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதேபோல் சாந்து வார்பட்டியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ள-ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் இடவசதி இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை