உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் திறப்பு

குளித்தலையில் ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் திறப்பு

குளித்தலை: குளித்தலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது.குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில், இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்துடன் இணைந்து, 1.14 கோடி ரூபாய் மதிப்பில், 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், 22 ஆயிரம் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் அடங்கிய விற்பனை நிலையம் கட்டப்பட்டது. இது தமிழகத்தில் பட்டுக்கோட்டை, ஓசூர் அடுத்த மூன்றாவது பங்க் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று மதியம் பெட்ரோல் பங்க் விற்பனை நிலையத்தை, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். பின்னர், பெட்ரோல் பங்க் வளாகத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, செந்தில் பாலாஜி, அரசு கூடுதல் தலைமை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் மோகன், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் சேலம் முதன்மை மண்டல மேலாளர் அய்யப்பதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி