மேலும் செய்திகள்
மருந்தியல் அலுவலர் வலியுறுத்தல்
30-Jun-2025
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி முன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வில் உள்ள தேக்க நிலையை உடனடியாக களைய வேண்டும். தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பும் முடிவை கைவிட வேண்டும். பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்துகளில், வெப்ப நிலையை பராமரிக்க வேண்டி குளிர் சாதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் சிவசண்முகம், முஸ்தபா, அறிவுச்செல்வி, குமரேசரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jun-2025