கோவில் இடத்தை தி.மு.க.,வினரிடம் ஒப்படைக்க திட்டம்: ஹெச்.ராஜா பகீர்
கரூர்: ''கரூர், வெண்ணைமலையில் கோவில் இடங்களை மீட்டு, தி.மு.க.,வினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது,'' என, மாநில பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனை-களை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாநில பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, நேற்று மதியம், சின்ன வடுகப்பட்-டியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்-கையால் பாதிக்கப்பட்ட, பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து, இடிக்கப்பட்ட வீடு, கையகப்படுத்தப்பட்ட இடங்-களை பார்வையிட்டார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறிய-தாவது:கடந்த, 2018 ல் கோவிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து, மீட்க இயக்கம் தொடங்கப்பட்டது. கோவில் நிலத்தில் வீடுகள் இருந்தால், அதற்கு வாடகை கட்ட சொல்லி இருந்தேன். அறநிலையத்துறை அதிகாரிகளும், இதை வரவேற்-றனர். இதுதொடர்பாக, இரண்டு முறை முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,யை சந்தித்து பேசியுள்ளேன். கரூர், வெண்ணைம-லையில், கோவில் நிலமாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். நானே கோவிலுக்கு கொடுக்க போராடுவேன். ஆனால், இந்த இடங்களை மீட்டு, தி.மு.க.,வினரிடம் ஒப்படைக்க திட்டமிட்-டுள்ளதாக தெரிகிறது. அப்படி செய்தால், பா.ஜ., தலை-யிடும்.இவ்வாறு அவர் கூறினார்.