உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

கரூர் கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில், போதைபொருள் இல்லாத தமிழ்நாடு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவ மாணவியர், போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா, எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி கமிஷனர் சுதா, துணை மேயர் தாரணி சரவணன், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.* பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அரவக்குறிச்சி எஸ்.ஐ., மகாலட்சுமி உறுதிமொழி ஏற்றதோடு, போதை விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், நாகூர் மீரான், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முகமது ஹாரிஸ் அலி, போதை ஒழிப்பு மன்ற பொறுப்பாளர் முஹம்மது தாஹீர் உசேன், தேசிய மாணவர் படை அலுவலர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* மோளையாண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜாசேர்வை, போதை பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தலைமை ஆசிரியர் வீரப்பன், ஆசிரியர்கள் கணேசன், கிருத்திகா உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் லீலியா நன்றி கூறினார்.* நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், செயல் அலுவலர் காந்தரூபன் முன்னிலையில் ஆசிரியர்கள், துாய்மை பணியாளர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். கவுன்சிலர்கள் லதாசங்கர், பாலு, ரவி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.* குளித்தலை அரசு கலைக்கல்லுாரியில், போதை ஒழிப்பு குழு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்கப்பட்டது. முதல்வர் சுஜாதா, குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, தமிழ்த்துறை தலைவர் ஜெகதீசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை