உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூதாடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை

சூதாடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை

மோகனுார்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி வாரச்சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையில் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாரச்சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த சத்திய-சீலன், 36, அண்ணா நகரை சேர்ந்த தினேஷ், 37, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துாரை சேர்ந்த அருண்வேல், 50, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ரொக்கம் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ