6 நாள் திருவண்ணாமலை தீப விழா பணி 1 நாள் ஓய்வில்லை என குமுறும் போலீசார்
கரூர்: 'திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்-காக, ஆறு நாட்கள் தொடர்ச்சியாக பணியில் இருந்தும், ஒரு நாள் கூட ஓய்வில்லை' என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் புலம்பு-கின்றனர்.திருவண்ணாமலையில், கடந்த, 3ல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, தமிழகத்தில் உள்ள, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 15,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக, திருவண்ணாம-லைக்கு சென்றனர். கரூர் மாவட்டத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்ட போலீசார், கடந்த, 30ல் திரு-வண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். பின், பாதுகாப்பு பணி முடிந்த பின், கடந்த, 5 மாலை, போலீசார் அனைவரும் கரூர் திரும்பினர். வழக்கமாக, வெளியூர் பாதுகாப்பு பணி, சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு சென்றால், மறுநாள் விடுமுறை வழங்குவது, சில மாவட்டங்களில், உயர் போலீஸ் அதிகாரி-களின் வாய்மொழி உத்தரவுப்படி நடைமு-றையில் உள்ளது.ஆனால், கரூர் மாவட்டத்தில் அத்தகைய விடு-முறை வெளியூருக்கு சென்று திரும்பும் போலீசா-ருக்கு, வழங்குவது இல்லை என, புகார் உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழா பணிக்காக சென்றுவிட்டு திரும்பிய, கரூர் மாவட்ட போலீசாருக்கு, கடந்த, 6ல் விடுமுறை வழங்கவில்லை என, போலீசார் புலம்புகின்றனர்.கடந்த, 6ல் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், திருவண்ணாமலைக்கு சென்று திரும்பிய போலீ-சாரும், அன்றைய தினம் காலை, 6:00 மணிக்கு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவு போடப்-பட்டதால், திருவண்ணாமலை சென்று திரும்பிய போலீசார், கடும் அதிருப்தியில் உள்ளனர்.