குண்டும், குழியுமான சாலையால் அவதி
கரூர்:கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் எதிரே உள்ள சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி காமராஜ் தினசரி மார்க்கெட் எதிரே உள்ள, காசிம் தெரு சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், காசிம் தெரு சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மழை காலங்களில் சாலையில், தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.எனவே, காசிம் தெரு சாலையை உடனடியாக, பராமரிக்கும் வகையில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.