உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ் ஸ்டாண்டில் பள்ளங்கள்; டிரைவர்கள் கடும் அவதி

பஸ் ஸ்டாண்டில் பள்ளங்கள்; டிரைவர்கள் கடும் அவதி

கரூர்: கரூரில், குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், டிரைவர்கள் அவ-திப்படுகின்றனர்.கடந்த, 1984ல் இருந்து தற்-போது உள்ள இடத்-தில் பஸ் ஸ்-டாண்ட் செயல்-பட துவங்-கி-யது. ஆரம்பத்-தில், 50 பஸ்-கள் நிறுத்--தப்-ப-டும் வகை-யில் இருந்த பஸ் ஸ்-டாண்ட், பிறகு நான்கு ஆண்--டுகளில், 70 பஸ்-கள் வரை நிறுத்-தும் அள-வுக்கு விரி-வாக்-கம் செய்--யப்-பட்-டது.தமி-ழ-கத்-தில் 'ஏ' கிரேடு அந்-தஸ்து பெற்ற, கரூர் பஸ் ஸ்-டாண்-டில் டவுன் பஸ்-க-ளும் தற்-போது நிறுத்-தப்-பட்டு வரு-கி-றது. அருகில், மினி பஸ் ஸ்டாண்டும் உள்ளது.கடந்த, 1995ல் கரூர் தனி மாவட்-ட-மாக அறி-விக்-கும் முன்-பாக டெக்ஸ்-டைல்ஸ், பஸ்-பாடி கட்-டும் தொழில் மற்-றும் கொசு-வலை உற்-பத்தி தொழி-லும் அதி-க-ரித்-தது. இத-னால் நாள்-தோ-றும் ஏரா-ள-மான தொழி-லா-ளர்-கள் திருச்சி, ஈரோடு, நாமக்-கல் உள்-ளிட்ட பகு-தி-க-ளில் இருந்து கரூ-ருக்கு வரு-கின்றனர். நாள்-தோ-றும், 200க்-கும் மேற்-பட்ட பஸ்-க-ளும், ஆயி-ரக்-க-ணக்-கான பொது--மக்-க-ளும் கரூர் பஸ் ஸ்-டாண்-டுக்கு வரு-கின்-றனர். குறுகிய இடத்தில் செயல்படும் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இரு-சக்கர வாகனங்கள், கார்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்-பட்டுள்ளது. இதனால், பஸ் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை பகுதிகளுக்கு பஸ்கள் செல்லும், பின்புற தார் சாலையும் குண்டும், குழி-யுமாக உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டில் உள்ள பள்ளங்கள், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை