ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
குளித்தலை, குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வந்து செல்வர்.நேற்று பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி மாலை 5:00 மணியில் இருந்து பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், சிவனடியார்கள் என பலர், மூன்று கி.மீ., மலைப்பாதையை சுற்றி நடந்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது. சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.