உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மதியம், 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், நந்தி சிலைக்கு வெள்ளிக்கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் சிலைகளுக்கும், மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !