உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

கரூர் ;புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்க தின விழா போட்டி நடந்தது.அதில், மாவட்ட வனத்துறை சார்பில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டது. பிறகு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.வெற்றி பெற்ற, மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், தலைமையாசிரியர் விஜயன், ஆசிரியர்கள் ஜெரால்டு, அடிலின் கிறிஸ்டினா, ஜெய் சங்கர், யுவராஜா பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ