உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடு பணி மும்முரம்

சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடு பணி மும்முரம்

கரூர், சுதந்திர தினத்தையொட்டி, கரூர் மாவட்ட அரசு மைதானத்தில், முன்னேற்பாடு பணி நடந்தது. நாட்டின் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நாடு முழுவதும் விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கரூர் மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் தங்கவேல், இன்று காலை, 9:05 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுகிறார். இதனால் நேற்று காலையில் இருந்து, அரசு விளையாட்டு மைதானத்தை, துாய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேடை அமைக்கும் பணி நடந்தது. பின், போலீஸ் அணிவகுப்புக்கான ஒத்திகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை