உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஐ தகுதியான நாளாக கொண்டு, புதிய வாக்காளர்களை பெருமளவில் சேர்த்தல், அதிலும் குறிப்-பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. .https://voterportal.eci.gov.in மற்றும் VOTER HELP LINE என்ற மொபைல் செயலி மூலமாகவும், வாக்காளர்கள் பெயர், புகைப்-படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வ-ளிக்கும் வகையில், 1950 என்ற எண்ணில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இருந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை, ஆர்.டி.ஓ., முகமதுபைசல் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், கலெக்டர் நேர்முக உதவி-யாளர் (பொது) பச்சமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி