விபத்து அறிவிப்பு பலகை சேதமடைந்ததால் சிக்கல்
கரூர்: கரூர் அருகே, போலீசார் சார்பில் வைக்கப்பட்ட விபத்து எச்சரிக்கை பலகை சேதமடைந்துள்ளது.கரூர் நகரை சுற்றி மதுரை, சேலம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோவை, ஈரோடு மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. இதனால், கரூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில், போலீசார் சார்பில், விபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகள் சேதமடைந்துள்ளன. மேலும், பல பலகைகள் உடைந்து, தொங்கிய நிலையில் உள்ளது. இதனால், கரூர் மாவட்ட பகுதிகளுக்கு வரும், வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள், விபத்து பகுதி என்பதை அறிய முடியாமல், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.எனவே, கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள, விபத்து பகுதி என வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்றி விட்டு, புதிய பலகைகளை கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.