உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பேராசிரியை மாயம் அண்ணன் புகார்

பேராசிரியை மாயம் அண்ணன் புகார்

குளித்தலை,: குளித்தலை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்., நடு-தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 48; கூலித்-தொழிலாளி. இவரது தங்கை கிருத்திகா, 23. கரூர், தென்னி-லையில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியர். இவருக்கு, வரும், 28ல் திருமணம் ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த, 22ல், உடன் பணிபுரியும் சக பேராசிரியர்களுக்கு பத்தி-ரிகை வைத்துவிட்டு வருவதாக, கிருத்திகா கூறிவிட்டு சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் விசாரித்தும், கிருத்திகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், காணாமல் போன தங்கையை கண்டுபிடித்து தருமாறு, அண்ணன் சக்திவேல் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ