உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 16 இடங்களில் உழவரை தேடி- திட்ட முகாம்

மாவட்டத்தில் 16 இடங்களில் உழவரை தேடி- திட்ட முகாம்

கரூர் ;கரூர் மாவட்டத்தில், 16 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் இன்று (25ம் தேதி) நடக்கிறது.கரூர் மாவட்டத்தில், 16 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் இன்று (25ம் தேதி) நடக்கிறது. கரூர் வட்டாரத்தில், புஞ்சை புகளுர் வடக்கு, நஞ்சை கடம்பன் குறிச்சி கிராமத்திலும், தான்தோன்றிமலை வட்டாரத்தில் வெள்ளியணை (தெ), உப்பிடமங்கலம் மேற்கிலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், கொடையூர், அம்மாபட்டியிலும், க.பரமத்தி வட்டாரத்தில், சூடாமணி, க.பரமத்தியிலும், குளித்தலை வட்டாரத்தில், சூரியனுார், மருதுார் வடக்கு, தோகைமலை வட்டாரத்தில் பில்லுார், ஆர்.டி.மலை கிராமத்திலும் நடக்கிறது.கடவூர் வட்டாரத்தில், வடவம்பாடி, பண்ணப்பட்டி கிராமத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மணவாசி, மகாதானபுரம் தெற்கு கிராமத்திலும் நடக்கிறது. இதில், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், அரசு திட்டங்கள் பற்றிய தகவல், உயிர்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல், வேளாண் விற்பனை சம்பந்தப்பட்ட தகவல், கூட்டுறவு சங்கங்களிலும், வங்கிகளிலும் பயிர்க்கடன் பெற தேவையான உதவி உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ