உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கரூர்: உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. இது தொடர்பாக கட்டளை, சிந்தலவாடி மற்றும் பஞ்சப்பட்டி ஆகிய மூன்று குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில், பொது மக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி