க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.96 கோடிக்கு திட்டப் பணி
கரூர், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ தொடங்கி வைத்தார். இதில், அத்திப்பாளையம் முதல் வல்லாகுளத்துப்பாளையம் வரை தார்ச்சாலை, காந்திநகரில் மினி சமுதாய கூடம், குப்பத்தில் சமுதாய கூடம், கலைஞர் நகரில் தார்ச்சாலை பணி, முன்னுாரில் சமுதாய கூடம், காட்டுமுன்னுாரில் நாடகமேடை, மோளபாளையத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, புன்னம் பஞ்., நடுப்பாளையத்தில் சமுதாய கூடம், சடையம்பாளையம், கைலாசபுரம் ஆகிய இடங்களில் நாடக மேடை உள்பட பல்வேறு பணிகளுக்கு, 2.96 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கவுள்ளது. நிகழ்ச்சியில், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.