கரூர் மாநகராட்சியில் ரூ.5.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
கரூர், கரூர் மாநகராட்சியில், 5.80 கோடி ரூபாய் மதிப்பில், 87 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை, கரூர் எம்.எல்.ஏ.,செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி, 17வது வார்டில் கிருஷ்ணா நகர் பகுதியில், 73.5 லட்சம் மதிப்பில், 10 இடங்களில் மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணி, அருணாசல நகர் 5வது கிராஸ் பகுதியில், 11.9 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 இடங்களில் மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணி, செல்வம் நகரில், 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி, 12 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் மற்றும் மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.மேலும், 19வது வார்டு சங்கர் நகரில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கொளந்தானுாரில், 5.75 லட்சம் ரூபாய் மதிப்பில் மண் சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணி, ராமானுாரில், ரூ.39.95 லட்சம் மதிப்பில் ஐந்து இடங்களில் மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணி, 1வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில், 7.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி.கே.ஏ. நகர் 10வது கிராஸில், 57 லட்சம் ரூபாய் மதிப்பில், 8 இடங்களில் மண் சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணி, அரிக்காரம்பாளையத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 7 இடங்களில் மண்சாலையை தார்சாலையாக அமைக்கும் பணி, கே.பி.நகரில், 15 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 34 வது வார்டு பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தனிப்பாதை அமைத்து, அதற்கு பேவர் பிளாக் அமைக்கப்பட்ட பணிகள் திறந்து வைக்கப்பட்டன.கரூர் மாநகராட்சி வார்டுகளில் மொத்தம், 5.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 87 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாநகராட்சி செயற் பொறியாளர் சுந்தர்ராஜ், மண்டல குழுத் தலைவர்கள் கனகராஜ், அன்பரசு, ராஜா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.