உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிழக்கு மாவட்ட செயலர் சக்திவேல் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் நிர்வாகி உதயகுமார் மீது, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், கரூர் மாவட்ட வி.சி.க., நிர்வாகிகள் மீது, பொய் பிரசாரம் செய்து வருபவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மேற்கு மாவட்ட செயலர் புகழேந்தி, பொருளாளர் சதீஷ், எம்.பி., தொகுதி செயலர் துரை செந்தில், தொழிற் சங்க செயலர் சுடர்வளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை