மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
29-Jul-2025
கரூர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில், தாலுகா அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை, பட்டப்படிப்புக்கு உயர்த்த வேண்டும், 10 ஆண்டு மற்றும் 20 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அதற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், பட்டா மாறுதல் பரிந்துரை உத்தரவை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கையர்கரசி, வட்ட தலைவர்கள் பூபதி, ஆனந்தராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Jul-2025