மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
21-Jan-2025
கரூர்: கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளை முன்னிட்டு, அவர்க-ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மின்துறை அமைச்சரும், அக்கட்சி மாவட்ட செயலாளருமான செந்தில்பா-லாஜி தலைமை வகித்தார். இதையடுத்து, மொழிப்போர் தியா-கிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின், தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகா-மசுந்தரி, கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மொழிப் போர் தியா-கிகள் தினம், கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான விஜயபாஸ்கர், மொழிப்போர் தியாகிகள் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், மாணவர் அணி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Jan-2025