உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.அதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும், தி.மு.க., அரசு அமல்படுத்த வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிக-ளுக்கும், விரிவுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கான காப்-பீட்டு திட்டத்தை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தர்ணா போராட்டத்தில், இந்திய தொழிற்சங்க மைய மாநில துணைத்த-லைவர் அம்சராஜ், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், இணைச்செயலாளர் இளங்கோ, பொருளாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி